திரைப்படங்களின் திருட்டுத்தனமான வெளியீடுகளையும், காப்பிரைட் சட்ட மீறல்களையும் முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளைக் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சினிமா பைரசியைத் தடுத்து நிறுத்த ‘சினிமாடோகிராப் சட்டம்’ மிகத் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக விளக்கமளித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, காப்புரிமைதாரர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோதமாகப் படங்களை வெளியிட்டு வந்த சுமார் 4,996 டெலிகிராம் சேனல்களும், 1,263 இணையதளங்களும் என மொத்தம் 7,393 URL-கள் அதிரடி முறையில் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா துறையினரைச் பல ஆண்டுகளாக வாட்டி வதைத்து வந்த பைரசி பிரச்சினைக்ளுக்குத் தீர்வு காணும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தச் சீரிய நடவடிக்கை சினிமா உலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகத் தொடர்ச்சியான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதால், இணையத்தில் திருட்டுப் படங்களை வெளியிடும் கும்பல் மத்தியில் தற்போது நடுங்க வைக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
