தன்னுடைய மனைவி பிரிந்ததற்கு ராஜ்கிரன் தான் காரணம் என்று நடிகர் முனீஸ் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். முனீஸ் ராஜூ ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியாவும் கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் பல சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில் அதன் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தனர்.

இந்த நிலையில் கணவரிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும் தன்னை மன்னித்து விடும்படியும் பிரியா ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள முனீஸ், இது ராஜ்கிரன் தரப்பு வேலை தான், நடக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.