கனா காணும் காலங்கள் 2-ஆம் சீசன் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் நடித்து வரக்கூடிய ராஜா வெற்றி பிரபு மற்றும் தீபிகா போன்றோர் காதலித்து வந்த சூழலில், அண்மையில் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற அந்த திருமணத்தின் போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியது.

தீபிகாவை விட ராஜா வெற்றி பிரபு வயதில் குறைந்தவர் என்று ஒரு செய்தி இணையத்தில் பரவி வந்தது. அதற்கு தீபிகா அளித்த விளக்கத்தில் “நான் பெரிய பெண் எல்லாம் இல்லை. விக்கிபீடியாவில் நான் 1995 பிறந்தவர் எனவும், அவர் 1998-ல் பிறந்தவர் எனவும் தவறாக இருக்கிறது. ஆனால் உண்மையில் நான் 1997-ல் பிறந்தேன், அவர் 1996-ல் பிறந்தார். ஒரு ஆண்டு 10 மாதங்கள் ராஜா வெற்றி பிரபு என்னை விட பெரியவன்” என தீபிகா விளக்கம் கொடுத்திருக்கிறார்.