தெலுங்கு திரையுலகில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் சர்வானந்த். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது. ஐடி துறையில் பணிபுரிந்து வரும் ரக்ஷிதா ஷெட்டி என்பவரை தான் சர்வானந்த் திருமணம் செய்கிறார். வருகிற ஜூன் 3-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் திருமணம் நடைபெற இருக்கிறது.

இப்போது திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் சூழலில், சர்வானந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார். அதாவது, சர்வானந்த் பயணம் மேற்கொண்ட கார் பிலிம்நகர் பகுதியில் சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்துகுள்ளானது. காரிலிருந்த சர்வானந்த்தை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். சர்வானந்த்துக்கு பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை, நலமாக தான் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.