ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ராஜஸ்தானில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ராஜஸ்தானின் முதல்வர் யார் என்று பெரும் இழுப்பறி நடந்து வந்த நிலையில் பிறகு 9 நாட்களுக்கு பிறகு இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பஜன்லால் ஷர்மாவை முதல்வராக தேர்வு செய்துள்ளனர். சங்கனர் தொகுதியில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் எம்எல்ஏ ஆன நிலையில் இதன் மூலம் முன்னணி தலைவரான வசுந்தரா ராஜேவுக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது.