ராஜஸ்தான் மாநிலத்தில் 10 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் சர்மா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெய்பூரில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களுக்கும் புது முகங்களை முதலமைச்சராக அறிவித்துள்ளது பாஜக.