பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை கூட அப்டேட் செய்யாதவர்கள் டிசம்பர் 14, 2023-க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது. காலக்கெடு முடிந்த பிறகு அப்டேட் செய்ய வேண்டுமானால் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதற்கு பின் திருத்தங்கள் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்தது.

இந்நிலையில் இது குறித்த விளக்கத்தை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது ஆதாரில் உள்ள முகவரி மற்றும் பிற விவரங்களை மாற்றுவதற்கு டிசம்பர் 14 கடைசி தேதி அல்ல என தெரிவித்துள்ளது. அதற்கு பின் உங்களுடைய விவரங்களை கட்டணம் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் எனவும் டிச. 14 வரை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.