ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் சிக்கிய உயர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை 280 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தமிழக முற்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அவசரகால பேரிடர் விரைவு படை மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஒடிசா அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலை ஐந்து லட்சம் இழப்பீடு வழங்க உள்ளதாகவும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஆந்திர முதல்வரும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.