மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குச் சிறுவனைக் கடத்திச் சென்ற அந்த மர்ம நபர்கள், அவனுக்குக் கடுமையான உடல் ரீதியான சித்திரவதைகளை அளித்துள்ளனர்.

இதில் அந்தச் சிறுவனின் சிறுநீர்ப் பாதை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. காயங்களுடன் போராடிய சிறுவனை மீட்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுவனுக்கு, மீண்டும் உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்தச் சம்பவம் ரயில்வே போலீசார் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனைத் துன்புறுத்திய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை தற்போது கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.