சமூக வலைதளங்களில் சில நேரங்களில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் வைரலாவதுண்டு. அந்த வகையில், தற்போது ஒரு பசு மாடு சிறுமி ஒருத்தியின் உயிரைக் காப்பாற்றும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுமி கவனக்குறைவாக ரயில் தண்டவாளத்திற்கு மிக அருகில் நின்று கொண்டிருக்கிறார்.
அப்போது மின்னல் வேகத்தில் அந்தப் பாதையில் ஒரு ரயில் வருவதைக் கண்ட அங்கிருந்த ஒரு பசு, நொடிப் பொழுதில் பாய்ந்து வந்து அந்தச் சிறுமியைத் தள்ளிவிட்டு பாதுகாப்பாக மீட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், அந்தப் பசுவின் உருவத்தில் கடவுளே நேரில் வந்து அந்தச் சிறுமியைக் காப்பாற்றியதாக நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். “ஸ்பிரிச்சுவல் அன்ஹைடு” (spiritual_unhide) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
View this post on Instagram
“>
விலங்குகளிடமும் தெய்வீகக் குணம் உண்டு என்பதற்கும், அந்தச் சிறுமியின் அதிர்ஷ்டத்திற்கும் இந்த வீடியோவே சாட்சி எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். உயிரைக் காக்கும் இந்த உன்னதமான செயல் பலரின் இதயங்களையும் நெகிழச் செய்துள்ளது.
