மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சில காரணங்களால் ரயில் அட்டவணை மற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தின் போக்குவரத்தை கணக்கில் கொண்டு, அனைத்து நிலையங்களின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் நிஜாமுதீன்-எர்ணாகுளம் மங்களா (12618), எர்ணாகுளம்-ஹஸ்ரா தி நிஜாமுதீன் மங்களா (12617) மற்றும் மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் (16344) ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 16344 மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா ரயிலானது, திருச்சூர் – வருகை 10.35 PM (11.12), ஆலுவா 11.28 (12.06 AM), எர்ணாகுளம் லாம் டவுன் 11.52 (12.30), கோட்டயம் நள்ளிரவு 1.02 (1.40), செங்கனூர் 1.40 (2.21), காயம்குளம் 2.05 (2.45), வர்க்கலா 3.09 (3.53), திருவனந்தபுரம் 4.45 (5.00)