சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற பெற்று முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாது. எங்களுக்கே தண்ணீர் போதவில்லை. பிறகு எப்படி தமிழ்த்திற்கு கொடுக்க முடியும் என்று பேசியது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக அண்ணாமலை கூறுகையில், நடப்பு வருடம் தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் கூறியுள்ளார். எனவே ஜூலை 11ஆம் தேதி கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க கூடாது. அப்படி அவர் அந்த கூட்டத்திற்கு சென்றால் அவர் மீண்டும் தமிழகத்திற்குள் வர முடியாது நாங்கள் விடமாட்டோம். நீங்கள் எப்படி கோட்டைக்கு செல்கிறீர்கள் என்று பார்ப்போம் முதல்வரே என்று பேசியுள்ளார்.