தமிழ்நாட்டில்  கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த தக்காளி விலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ரூ. 130 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால், சில்லறை வணிக கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், தக்காளியை அரசே கொள்முதல் செய்து, குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை செய்து, குடும்ப பெண்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அறிவிப்பை வெளியிடவுள்ளார். இதனால் தக்காளி விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.