தமிழகத்தில் போலி மதுபானம், மதுவில் கலப்படம் உள்ளிட்ட பிரச்சினைகளை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் டெட்ரா பேக்கில் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுபானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுபானங்களை டெட்ரா பேக்கில் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வரப்படுகிறது. அப்படி டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும். மேலும் இதனை மறுசுழற்சி செய்வதால் விவசாயிகளுக்கு நன்மை என்றும் கூறியுள்ளார். டெட்ரா பேக்கில் மதுபான விற்பனை குறைத்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.