சமூக வலைதளங்களில் தற்போது ஒரு விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க வீடியோ வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலின் பெட்டி ஒன்றிற்குள் பெண்கள் குழு ஒன்று அமர்ந்து, தக்காளி, வெங்காயம், கோபி மற்றும் கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்தச் சூழல் ஒரு ரயில் பெட்டியை சிறு காய்கறி சந்தையாக மாற்றியுள்ளது.

மேலும் பயணிகள் எவ்வித தயக்கமும் இன்றி தங்களுக்குத் தேவையான காய்கறிகளை ரயிலிலேயே வாங்கிக் கொள்வதைக் காண முடிகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் கணக்கு பகிர்ந்துள்ளது. உள்ளூர் தகவல்களின்படி, கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்குச் செல்லும் இந்த பெண்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக ரயிலிலேயே காய்கறி வியாபாரம் செய்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Archita Mallick (@archita_mallick3311)

“>

இந்நிலையில் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைவதோடு, அவர்கள் சந்தைக்குச் செல்லும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. ரயிலுக்குள் அமைக்கப்பட்ட இந்த புதுமையான சந்தை, நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.