ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பல விதிகளை கடைபிடிக்க வேண்டும். இதனிடையே சில பயணிகள் மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர் (அ) சில நேரம் பயணிகள் ரயிலில் மதுவுடன் பயணிக்கிறார்கள். ரயிலில் மதுபானங்களை எடுத்து செல்வது நீங்கள் பயணிக்கும் மாநிலத்தை பொறுத்து அமையும். ஏனென்றால் அனைத்து மாநிலங்களுக்கும் மதுபானம் குறித்து விதிகள் இருக்கிறது.

ரயில், மெட்ரோ, பேருந்து ஆகிய எவ்வித போக்குவரத்து வசதிகள் வாயிலாகவும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மதுபானங்களை கொண்டுவர முடியாது. இதுபற்றி வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தீபக்குமார் “ரயிலில் மதுபானம் கொண்டு செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ரயிலில் பயணிகள் மது அருந்தி பயணம் மேற்கொண்டால் அவர்கள் மீது ரயில்வே துறை கடும் நடவடிக்கை மேற்கொள்கிறத” என கூறினார்.