தி கேரளா ஸ்டோரி படம் சென்ற 5-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிட தடைவிதிப்பதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்தார். இப்படம் வெறுப்பு உணர்வையும் வன்முறையையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் படத்தை தடைசெய்வதாக அவர் தெரிவித்தார். அதேபோன்று தமிழ்நாட்டிலும் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதை திரையரங்கு உரிமையாளர்கள் நிறுத்திவிட்டனர்.

இதற்கு எதிராக படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட வழங்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தெரிவிக்கும்படி சொல்லி தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதேபோன்று திரைப்படத்திற்கு தடைவிதித்த மேற்கு வங்காள அரசும் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இருமாநில அரசுகளும் வருகிற புதன்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வியாழக்கிழமைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.