ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மறு காப்பீட்டாளர்கள் பிரீமியம் தொகையை 40 முதல் 60 சதவீதம் வரை அதிகரித்து வருகிறார்கள். போரின் காரணமாக பல நாடுகளில் விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த நிலை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு தொகைகளுக்கான பிரீமியம் தொகையை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தற்போது ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. மறு காப்பீடு செலவு அதிகரிப்பால் வாகன காப்பீட்டு தொகைக்கான பிரீமியம் தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மறு காப்பீட்டு விகிதங்களின் அதிகரிப்பால் இனி வரும் மாதங்களில் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் வாகன காப்பீடு போன்றவைகள் 10 வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.