ரயில் பயணத்தின் போது பெண்ணொருவரை இரண்டரை மணி நேரம் ஒரு நபர் ஒருதொடர்ச்சியாக உற்றுப் பார்த்ததும், இது குறித்து அந்தப் பெண் கேள்வி கேட்டபோது ஆத்திரமடைந்த அந்த நபர் அப்பெண்ணைக் கன்னத்தில் அறைந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ரயில்வேயில் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் எழுப்பியுள்ள இந்தச் சம்பவத்தில், அத்துமீறி நடந்து கொண்ட அந்த நபரின் செயல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகத் தட்டிக்கேட்ட போதிலும், அதற்கு வன்முறை மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது சட்ட ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

“>

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பொது இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதிகள் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை.

இந்நிலையில் ரயில்வே போலீசார் இது போன்ற புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனை மட்டுமே, எதிர்காலத்தில் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுக்கும் அரணாக அமையும்.