நேற்று  மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் சிலிண்டர் வெடித்து பத்து பேர் பலியாகி இருக்கிறார்கள். இதனால் தீபாவளி பண்டிகை முன்பு ரயில்களில் பயணம் செய்யும்பொழுது பட்டாசு உள்ளிட்ட எரியும் அல்லது வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் ரயிலில் கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் என்னென்ன?, ரயில்வே சட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

1989-ம் ஆண்டு ரயில்வே சட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர், பட்டாசுகள், அமிலம், மண்ணெண்ணெய், பெட்ரோல், தெர்மிக் வெல்டிங், அடுப்பு, வெடிபொருட்கள் போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது குற்றமாகும். மதுரை ரயில் தீ விபத்தில் 10 பேர் இன்று பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.