உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியர் தாக்கச் சொன்னதால் இஸ்லாமிய மாணவரை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியான நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மாணவரை இந்து மாணவர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஆசிரியை திருப்தா தியாகி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனை கட்டித்தழுவிய வீடியோ வெளியாகியுள்ளது. மாணவர்களிடம் வன்முறையை ஊக்குவிக்கும் ஆசிரியரின் செயல் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.