இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே வாரியம் செயல்பட்டு வருகிறது. ஏழைகள்  மக்கள் முதல் வசதியானவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு தேவையான வசதிகளுடன் குறைவான கட்டணத்தில் பயணித்துக் கொள்வதற்கு ரயில்வே போக்குவரத்து உதவி செய்து வருகிறது மாற்றுத்திறனாளிகள், மன வளர்ச்சி குன்றியவர்கள், முற்றிலும் பார்வையற்ற பயணிகள் மற்றும் மற்றொரு நபரின் உதவியில்லாமல் ரயிலில் பயணிக்க முடியாதவர்களுக்கு என பல்வேறு விதமான மக்களுக்கும் ரயில் டிக்கெட்டுகளில் இந்திய ரயில்வே சலுகை வழங்குகிறது. ரயிலில் பொது வகுப்பு, ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் 3 ஏசி பெட்டிகளில் 75% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் ஏசி 1 & 2 பெட்டிகளில் 50% தள்ளுபடியும், ராஜதானி, சதாப்தி போன்ற ரயில்களின் 3ஏசியில் 25%வரை தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் இவர்களுக்கு உதவி செய்வதற்காக உடன் செல்லும் ஒரு நபருக்கும் இந்த சலுகை உண்டு.