நிலம் பிரிப்பதில் ஏற்பட்ட ஆத்திரத்தால், தெலங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டம் முனகலா கிராமத்தில் மூத்த சகோதரி ராஜம்மா மற்றும் அவரது மகள்கள் சுமித்ரா, லக்ஷ்மி ஆகியோரை, இளைய சகோதரர் உபேந்தர் ரெட்டி (BSNL ஊழியர்) டிராக்டரால் ஏற்றி கொலை செய்ய முயன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடும்பச் சொத்தான 5 ஏக்கர் நிலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி ராஜம்மாவுக்குப் பங்கிட்டதில் ஏற்பட்ட கோபத்தால், நெல் அறுவடை செய்து கொண்டிருந்த அக்கா மற்றும் அக்காளின் இரு மகள்கள் மீது உபேந்தர் டிராக்டரை ஏற்றித் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் அங்கிருந்த மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்த புகாரின் பேரில், முனகலா காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான உபேந்தர் ரெட்டியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
