ஆந்திர மாநில துணை முதல்வரும், திரைப்பட நடிகருமான பவன் கல்யாண் நடித்து வரும் ‘They Call Him OG’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய பிரமாண்ட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, மேடைக்கு வந்த பவன் கல்யாண், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வாளை சுழற்றினார். அச்சமயம், அந்த வாள், அருகில் நின்றிருந்த அவரது தனிப்பட்ட பாதுகாவலருக்குப் பக்கம் சென்றது. அதனை தவிர்த்து விலகியதால் பாதுகாவலர் நூலிழையில் உயிர்தப்பினார்.
Aat Makki Kirikiri..💥💥💥💥💥💥
Ustaad🥹🥹🥹🥹🔥🔥🔥🔥🔥🔥#OGConcert pic.twitter.com/mGBeyzNlhj— Arshad (@arshadtweetz98) September 21, 2025
இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பலரும் பவன் கல்யாணின் இந்த செயலை பொறுப்பற்ற நடந்துக்கொள்ளல் எனக் குறிப்பிடுகிறார்கள். “விழா மேடையில் அத்தனை அபாயகரமான செயல் தேவையா?” என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த பாதுகாவலர் அனுபவம் உள்ளவராக இருந்ததால் விபத்தை தவிர்க்க முடிந்தது என கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
