மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் இருந்து டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் வரை இயக்கப்படும் கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் (ரயி. எண் 22182) ரயிலின் பொதுப் பெட்டியில், இருக்கைக்காக பெண்கள் இடையே ஏற்பட்ட சண்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக வைரலாகிய காணொளியில், இரண்டு பெண்கள் ஒரு இருக்கையைப் பகிர முயற்சிக்கையில், தகராறு ஆரம்பமாகிறது. ஆரம்பத்தில் வாய்வாதமாக இருந்த மோதல், குத்து, உதை, தலைமுடி இழுத்தல் என கடுமையான தாக்குதல்களாக மாறுகிறது.
சில ஆண் பயணிகள் சமாதானப்படுத்த முயன்றபோதும், பெண்கள் அவர்களையும் தாக்க முயற்சித்ததாக காட்சியில் தெரிகிறது. இருவரும் ஒரு இருக்கையை கைப்பற்ற முயன்றபடியே, ரயில் நகரும் நிலையில் சண்டை தொடரும் காட்சி பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த ஒரு பயணி, வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்டு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்து, பொதுப் பெட்டிகளில் ஏற்படும் அசௌகரியங்களை கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு நாளும் பொதுப் பெட்டிகளில் பயணிக்க வேண்டியவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?” என அவர் கேட்டுள்ளார்.
மேலும் இக்காட்சி சமூக வலைதளங்களில் விரைவில் வைரலாக பரவ, பலரும் ரயில்களில் பொது வகுப்பு பயணிகள் சந்திக்கும் சூழ்நிலைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். சிலர், “இது அன்றாடத்தின் அனுபவம். யாரும் கேட்க விரும்பவில்லை” என கருத்து தெரிவித்துள்ளனர்.

–
