நடிகை ராஷ்மிகாவின் கைவசம் தற்போது தெலுங்கில் புஷ்பா 2 திரைப்படம் உள்ளது. அதேபோல தமிழில் ரெயின்போ என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்தியிலும் அனிமல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்திப் ரெட்டி வாங்கா இயக்குகிறார். இதன் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ராஷ்மிகாவிடம் தொகுப்பாளர் நீங்க நரோட்டூவை ரகசிய திருமணம் செய்து கொண்டீர்களாமே? என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு ரஷ்மிகாவும் ஆமாம் என்று சொன்னதோடு என் இதயமே அவருக்குத்தான் அந்த கதாபாத்திரத்தை முழுவதுமாக திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார். உண்மையிலேயே ந?நரூட்டோ என்பது ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம். அதற்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் ரஷ்மிகாவும் ஒருவர். நரூட்டிவின் தீவிர ரசிகை இவர் என்பதை பலமுறை கூறியிருக்கிறார். ஒரு முறை கூட இன்ஸ்டாகிராமில் நரூட்டோ பொம்மையை முத்தமிட்டபடி என்னுடைய லவ்வர் என்று குறிப்பிட்டிருந்தார்.