தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவரின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அதில் இருபது வருடங்களுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா நடிகர் விஜய்க்கு இசையமைக்க உள்ளார். என்னிடையில் வெங்கட் பிரபு தன்னுடைய twitter பக்கத்தில், அடுத்தது என்ன? நாளை காலை 11 மணி வரை காத்திருங்கள் என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தளபதி 68 படத்தின் அறிவிப்பாக இருக்குமோ என கமாண்ட் செய்து வருகிறார்கள்