நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவலா  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது என்றே சொல்லாம். ஏனெனில் தமன்னாவின் குத்தாட்டம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய ரஜினி, குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ இருந்திருப்பேன் என கூறியுள்ளார். ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவு செய்து குடிப்பதை விட்டுவிடுங்கள். குடிப்பதால் அம்மா, மனைவி உட்பட குடும்பத்தில் இருக்கும் அனைவரது வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது” என அட்வைஸ் கூறினார்.