தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்திருப்பது அவரது ஆதரவாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு முக்கிய காட்சியில் அருண்ராஜ் தோன்றுவதைப் பார்த்த நெட்டிசன்கள், “யோவ் மிலிட்டரி.. நீ எங்க இந்த பக்கம்?” என்ற வாசகத்துடன் அந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
யோவ் மிலிட்டரி நீ எங்க இந்த பக்கம்!! 🤣🤣🤣#JanaNayaganTrailer pic.twitter.com/cyN8iGzX5B
— Gypsy 🎭 (@Gypsy_1809) January 4, 2026
அரசியல் மேடைகளில் அனல் பறக்கப் பேசிப் பழகிய அருண்ராஜை, இப்போது ஒரு நடிகராகத் திரையில் பார்ப்பது புதுமையாகவும் அதே சமயம் மிகவும் கெத்தாகவும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரைலரில் அவர் வரும் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. அரசியலைத் தாண்டி, ஒரு கலைஞனாகவும் அவர் காட்டியுள்ள இந்த புதிய முகம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
