பலர் வீடியோக்களை உருவாக்கி யூடியூப்பில் வெளியிட்டு பிரபலமடைந்து வருகின்றனர். ஆனால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று பலருக்கும் தெரியாத ஒன்றாகும். மேலும் இப்படி பணம் சம்பாதிக்க சில விதிமுறைகள் உள்ளன. உங்கள் வீடியோக்கள் பார்வைகளை பெற்ற பின்னரே அவை கணக்கில் சேர்க்கப்படும்.

பார்வையின் அடிப்படையில் பணம் வழங்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் இந்தியாவில் ஒரு வீடியோ 10 லட்சம் பார்வைகளைப் பெற்றால் ரூ.7 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பெற வாய்ப்புள்ளது.