புத்தாண்டு தினமான இன்று (ஜன.1) தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வரும் ஜனவரி 5-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 5-ம் தேதி காலை காலை 10 மணிக்கு இக்கூட்டம் தொடங்குகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, வரும் தேர்தலில் தேமுதிக எந்தப் பக்கமும் சாயாமல் தனித்துப் போட்டியிடுமா அல்லது ஏற்கனவே உள்ள கூட்டணியில் தொடருமா என்பது குறித்த முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும், தொகுதி வாரியாகப் பூத் கமிட்டிகளை அமைப்பது மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிகவின் பலத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா இருப்பதால், இந்தக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
