தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் சமீபத்தில் ஆற்றிய உரையில் திமுகவைத் “தீய சக்தி” என்றும், தனது கட்சியைத் “தூய சக்தி” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தஞ்சாவூரில் இன்று ஆவேசமாகப் பேசியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் வசந்த், “யார் உண்மையில் தீய சக்தி, யார் தூய சக்தி என்பது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்தான் தெரியும்; அதை மக்கள் முடிவு செய்வார்கள்” என்று சவால் விடுத்தார்.
அரசியலில் புதிதாகக் களம் காணும் கட்சிகள், ஆளுங்கட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டி அரசியல் செய்ய வேண்டுமே தவிர, இவ்வாறு விமர்சிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்துள்ள எண்ணற்ற நல்ல திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வரும் தேர்தலிலும் தங்களது கூட்டணியே அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
