குழந்தைகளின் சுட்டித்தனம் சில நேரங்களில் நம்மைச் சிரிக்க வைக்கும், ஆனால் இந்த வீடியோவைப் பார்த்தால் உங்கள் இதயம் ஒரு நிமிடம் நின்றுவிடும். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு சிறுவன் திடீரென நீச்சல் குளத்தில் தலைகீழாகக் குதிக்கிறான். இதைப் பார்த்ததும் “ஐயோ குழந்தைக்கு என்ன ஆகுமோ?” என்று பதற்றமடைவதற்குள், அந்தச் சிறுவன் தண்ணீருக்குள் காட்டிய வித்தை அனைவரையும் உலுக்கியுள்ளது. ஒரு தேர்ந்த நீச்சல் வீரரைப் போல அவன் தண்ணீருக்குள் செய்த அந்தப் பிரம்மாண்டமான செயல், தற்போது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து வியந்துள்ளனர். 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது நிஜமாவே ஒரு குழந்தையா? இல்லை அடுத்த லெவல் அத்லெட்டா?” என வாயடைத்துப் போயுள்ளனர். அதே சமயம், இதுபோன்ற ஆபத்தான காரியங்களைச் செய்யும்போது பாதுகாப்பு அவசியம் எனச் சில பெற்றோர்கள் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
