உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில், ஆசிரியர் ஒருவரின் கள்ளக்காதலை அவரது மனைவி முக்காடு அணிந்து வந்து கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் அந்தப் பகுதியையே அதிர வைத்துள்ளது. அஜய் நகர் என்ற ஆசிரியர், வேறொரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை மோப்பம் பிடித்த அவரது மனைவி மீனு, கணவனுக்குச் சந்தேகம் வராதபடி முக்காடு அணிந்து மறைந்து வந்து கண்காணித்துள்ளார். சரியான நேரத்தில் கணவனும் அந்தப் பெண்ணும் ஒன்றாக இருந்தபோது, திடீரென முக்காடை நீக்கிவிட்டு அதிரடியாகப் பாய்ந்த மீனு, இருவரையும் சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.
Extra marital affair Kalesh: Wife Meenu caught husband Ajay Nagar (teacher) with another woman, reached wearing a veil and thrashed both over alleged relationship, Sitapur UP. Both sides later filed complaints at police station.
pic.twitter.com/YbfRTOKQdY— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 18, 2026
நடுரோட்டில் நடந்த இந்தத் தர்ம அடி சம்பவத்தால் அக்கம் பக்கத்தினர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கணவன் மற்றும் அந்தப் பெண்ணை மீனு துரத்தித் துரத்தி அடித்த காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். “வாத்தியார் வேலை பார்த்துக்கிட்டு இப்படியா?” என ஊர் மக்கள் முணுமுணுக்க, முக்காடு அணிந்து வந்து கணவனைப் பிடித்த மனைவியின் துப்பறியும் ஸ்டைலை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
