திருப்பத்தூர் மாவட்டம் உடையாமுத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில், கணவனை இழந்து தவித்த 26 வயது மருமகளை, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 66 வயது மாமனார் கர்ப்பமாக்கிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் மகன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது 26 வயது மனைவி தனது மூன்று குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், மருமகள் மீது ஆசை கொண்ட மாமனார் ஆனந்தராஜ், உனக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி, அந்தப் பெண்ணை அவ்வப்போதுத் தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
இதில் அந்தப் பெண் எதிர்பாராத விதமாகக் கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் ஆபத்து என பயந்த மாமனார், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என மிரட்டியுள்ளார்.
நாளடைவில் இந்த விஷயம் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவரவே, பயந்துபோன அந்தப் பெண் தன்னை யாரோ பலாத்காரம் செய்துவிட்டதாக நாடகமாடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர், அவரை திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அதிரடிப் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் அந்தப் பெண்ணிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்; ஆனால், போலீசார் நடத்திய மெகா கிடுக்கிப்பிடி விசாரணையில், தனது கர்ப்பத்திற்குத் தனது சொந்த மாமனார் ஆனந்தராஜ் தான் காரணம் என்ற அக்மார்க் உண்மையை அந்தப் பெண் உடைத்துள்ளார்.
இந்த அதிர்ச்சி வாக்குமூலத்தை அடுத்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார், தலைமறைவாக முயன்ற மாமனார் ஆனந்தராஜைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
