உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடாலுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை மணி அடித்துள்ளது இந்தச் சம்பவம். மதுராவைச் சேர்ந்த 40 வயது டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், கடும் குளிரில் இருந்து தப்பிக்க தனது காரின் ஜன்னல்களை முழுவதுமாக மூடிவிட்டு, உள்ளேயே நிலக்கரி அடுப்பை (Angithi) பற்றவைத்துப் படுத்துள்ளார்.
மறுநாள் காலை சுகதால் பார்க்கிங் பகுதியில் அவர் சுயநினைவின்றி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். காரின் ஜன்னல்கள் மூடப்பட்ட நிலையில், நிலக்கரி அடுப்பிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு வாயு அவரை மெல்ல மெல்லக் கொன்றுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் போதிய ஹோட்டல் முன்பதிவு இன்றி அவசரமாக வந்து, இப்படித் தங்கள் கார்களிலேயே தங்குவது மிகப்பெரிய ஆபத்தில் முடியும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. “குளிருக்கு இதமாக இருக்கும்” என்று அவர் செய்த ஒரு சின்ன விஷயம், அவரது உயிரையே பறித்துவிட்டது.
To all tourists.. Kindly don't do this. Don't sleep in your cars, don't be this desperate to come up.
Get confirmed hotel bookings and then come.
Incident from Nainital, fixed sleeping in car.#HimachalPradesh #Uttarakhand pic.twitter.com/muRpd8Ld4L
— Sidharth Shukla (@sidhshuk) December 29, 2025
சுற்றுலா வரும்போது பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்; தங்குவதற்கு முறையான வசதி இருந்தால் மட்டுமே இதுபோன்ற மலைப்பிரதேசங்களுக்குப் பயணம் செய்யுங்கள். ஒரு நொடி கவனக்குறைவும், போதிய விழிப்புணர்வு இல்லாமையும் எப்படிப்பட்ட விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சோகமான சம்பவமே சாட்சி.
