இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் பாயும் புனிதமான யமுனை நதி, இன்று குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்படும் இடமாக மாறிப்போனது வேதனை அளிக்கிறது. சமீபத்தில் வெளியான காணொளி ஒன்றில், நதிக்கரையில் நின்று கொண்டிருக்கும் நபர் ஒருவர் யமுனை நதியின் தற்போதைய மோசமான நிலையை விளக்குகிறார். அந்த நதி முழுவதும் நச்சுக்கழிவுகள் கலந்து, வெள்ளைப் போர்வையைப் போர்த்தியது போல நதி முழுவதும் நுரைகள் பொங்கி வழிகின்றன. பார்ப்பதற்கே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த நதி முற்றிலும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளதை அந்தக் காணொளி அப்பட்டமாகத் காட்டுகிறது.
🇮🇳 Meanwhile in Delhi, India
India’s Capital New Delhi’s river has so much trash dumped into it, that it’s now becoming Toxic and foaming everywhere. pic.twitter.com/lATIaIxBza
— Concerned Citizen (@BGatesIsaPyscho) December 28, 2025
ஆண்டுதோறும் யமுனையில் இதுபோல நுரைகள் பொங்குவதும், அது செய்திகளில் வருவதும் வழக்கமாகிவிட்டது. தொழிற்சாலை கழிவுகளும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் நேரடியாக ஆற்றில் கலப்பதே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. தூய்மையாக இருக்க வேண்டிய ஒரு நதி, மனிதர்களின் அலட்சியத்தால் இன்று உயிர்வாழத் தகுதியற்ற நச்சு ஆறாக மாறி வருவது தலைநகரின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலாக உருவெடுத்துள்ளது. இதைப் பார்க்கும் எவருக்கும் டெல்லியின் எதிர்காலச் சுகாதார நிலை குறித்து பெரும் அச்சம் ஏற்படுகிறது.
