மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மொத்தம் 293 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 233 தொகுதிகளின் அதிகாரப்பூர்வ முன்னிலை விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 109 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக அதிக இடங்களில் முன்னிலையில் இருந்த மம்தா பானர்ஜியின் கட்சி, தற்போது பெரும்பான்மைக்குத் தேவையான 148 இடங்களை விடப் பின்தங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு புறம், பாரதிய ஜனதா கட்சி 119 தொகுதிகளில் முன்னிலை பெற்று மம்தாவின் கோட்டைக்குள் ஊடுருவியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸை விட பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பது மமதா பானர்ஜிக்குக் கடும் சவாலாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கும் நிலையில், மதியம் வரை நிலவரங்கள் மாறக்கூடும் என்பதால், மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதில் நீயா-நானா போட்டி நிலவுகிறது.
