தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை 9:15 மணி நிலவரப்படி தற்போது தமிழக வெற்றிக்கழகம் 63 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதன் பிறகு திமுக 50 தொகுதிகளிலும் அதிமுக 39 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட முன்னிலை கிடைக்கவில்லை.