தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான சண்முகையா-விற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்குப் பதிலாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான ராமஜெயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் சண்முகையா, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற சமீபத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுப் புறக்கணித்து வருகிறார்.

இந்தச் சூழலில், அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்து அந்தத் தொகுதியிலேயே போட்டியிடப் போவதாகவும் ரகசியத் தகவல்கள் கசிந்துள்ளன.

வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிருப்தி அடைந்த திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து மாற்றுக் கட்சிகளை நோக்கிப் படையெடுப்பது அறிவாலய வட்டாரத்தில் பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது.