உத்தரப்பிரதேச மாநிலம் உள்ள லக்னோவின் ரஹிம்நகரில் அமைந்துள்ளது அனோகா மால். இங்கு ஆடை மற்றும் அனைத்து பொருட்களும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்குத் தேவையான ஆடைகள் மட்டுமே அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.  ஏழைகளுக்காக டாக்டர் அஹ்மத் ரஸா கான் என்பவர் இந்த வணிக வளாகத்தை அமைத்துள்ளார்.

இந்த மாலில், ஸ்வெட்டர்கள், போர்வைகள், செருப்புகள், பள்ளி சீருடைகள் போன்றவை மக்களுக்காக விநியோகம் செய்யப்படுகின்றன. தொழிலாளர்களும், ஏழைகளும் இவற்றை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். யாரிடமும் உதவி கேட்காமல் இங்குள்ள பொருட்களை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.