மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி, போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகையை கொடுக்க அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஒரு முக்கிய விதியை மாற்றி இருக்கிறது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதை ஊழியர்கள் கடைபிடிக்காமல் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியானது வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது.  அரசின் புது விதிகளின் அடிப்படையில், பணியில் கவனக்குறைவாகவும், அலட்சியம் ஆகவும் செயல்படக்கூடிய ஊழியர்கள் பணியில் இருந்து பணி ஓய்வுப் பெற்ற பிறகு அவர்களுடைய ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என அறிவுறுத்தியுள்ளது.

ஆகவே மத்திய அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் பணியின்போது எதாவது கடும் குற்றம் (அ) அலட்சியப்போக்கில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களது பணி ஓய்வுக்கு பிறகு கிராஜுவிட்டி மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு விதியை மாற்றியமைத்திருப்பது பற்றி சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பி உள்ளது.