புதுச்சேரியில் உணவு ஆர்டர் செய்த போது தவறுதலாக கூடுதல் பணம் அனுப்பி விட்டதாக கூறி உணவக உரிமையாளரிடம் மூதன முறையில் மோசடி செய்யப்பட்டது. புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் மரப்பாலம் சந்திப்பு அருகே உணவகம் நடத்தி வருகிறார். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் 50 ரூபாய்க்கு உணவு ஆர்டர் கொடுத்ததாகவும், அதற்கு தவறுதலாக 6500 ரூபாய் அனுப்பி விட்டதாகவும்  கூறினார்.

மேலும் இது தொடர்பாக நம்ப தகந்த வகையில் செல்போன் குறுஞ்செய்தியையும் அவர் அனுப்பியுள்ளார். இதை நம்பி அந்த நபரின் வங்கி கணக்கிற்கு 5400 ரூபாயை ஹரிபிரசாத் அனுப்பியுள்ளார். பின்னர்தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோன்று குணசேகர், வினோத், ஜாபர் சாதிக், முத்துக்குமார் ஆகியோரிடமும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி கும்பல் மோசடியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.