உத்தரப்பிரதேசம் மாநிலம் பவுடன் நகரை சேர்ந்த பன்னா லால் மற்றும் அனிதா தம்பதியினருக்கு திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகிய நிலையில் 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆறாவது முறையாக அனிதா கர்பமாக இருந்த நிலையில் தனக்கு மகன் வேண்டும் என்று விரும்பிய பன்னா லால், குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்காக அனிதாவின் வயிற்றை அரிவாளால் கிழித்துள்ளார்.

தாக்குதலில் இருந்து அனிதா உயிர் பிழைத்த  நிலையில் நீதிமன்றத்தில் கணவரின் கொடுமை தொடர்பாக புகார் அளித்துள்ளார். இத்தனை வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.