தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அல்லது எம்.எல்.ஏ-க்கள் யாராவது ஊழல், லஞ்சம் மற்றும் முறைகேடு போன்ற புகார்களில் சிக்கினால், உடனடியாக அவர்களது பதவி பறிக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் மிகவும் கறாராக உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்ட புகாரில் வேலூர் கணியம்பாடியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஒருவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற இந்த அதிரடி உத்தரவை முதலமைச்சர் விஜய் பிறப்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.