அதிமுகவில் நீடிப்பதா அல்லது தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யலாமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விராலிமலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று எஸ்பி வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச் சென்றபோது சி.விஜயபாஸ்கர் அங்கு செல்லாத நிலையில், தற்போது இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது; இந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த இறுதி முடிவை எடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
