ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத பனிப்பொழிவு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 130 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மிகக் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், ஒட்டுமொத்த கட்டிடங்களும் பனிக்கு அடியில் புதைந்து கிடக்கும் காட்சிகள் ஏதோ ஹாலிவுட் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் போலத் தோன்றினாலும், அவை அனைத்தும் கசப்பான உண்மையாக இருக்கின்றன.
<a href=”http://

“>
குறிப்பாக ஒரு வீடியோவில், நபர் ஒருவர் காருக்குள் அமர்ந்து ஸ்டீயரிங் வீலைத் திருப்புகிறார், ஆனால் காருக்கு வெளியே பார்த்தால் அடர்ந்த பனிப்பாறைகள் சூழ்ந்து சாலையே தெரியாத அளவுக்கு மூடியுள்ளன. கட்டிடங்களின் பல தளங்கள் பனியில் மூழ்கியுள்ளன.

மற்றொரு வீடியோவில் கட்டிடங்கள் முழுமையாக பனியால் போர்த்தப்பட்டிருக்கும் காட்சி பார்ப்பவர்களைப் பீதியடையச் செய்கிறது. இந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகின்றன.

இந்தக் கடுமையான சூழலைப் பார்த்த மக்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

“இவ்வளவு பனிப்பொழிவை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை, அங்கு வாழும் மக்கள் எப்படி இதை எதிர்கொள்கிறார்கள் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இயற்கை சீற்றத்தின் இந்த விஸ்வரூபம் கம்சட்கா பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ள நிலையில், இந்த வீடியோக்கள் தற்போது இணையம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளன.