பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரைச் சுற்றியுள்ள அரசியல் நகர்வுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்ததும், அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள் மாநிலத்திற்கு வந்திருந்த போதிலும், அவர்கள் எச். ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்தக் கட்சித் தலைவர்களே அவரைத் தவிர்க்கிறார்களா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், அரசியல் ரீதியாகக் கடும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவரான தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நாகரிகத்தின் அடிப்படையில் எச். ராஜாவை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். இந்தச் செயல் “அரசியல் வேறு, மனிதாபிமானம் வேறு” என்பதை நிரூபிப்பதாக இருப்பதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனால் “சொந்தக் கட்சித் தலைவர்களே எட்டிப்பார்க்காத நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதல்வர் நேரில் வந்து நலம் விசாரித்தது முதிர்ச்சியான அரசியல் செயல்பாடு” என நெட்டிசன்கள் இந்தச் சந்திப்பைக் கொண்டாடி வருகின்றனர்.