மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மைக் அணைக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா திட்டவட்டமான விளக்கத்தை அளித்துள்ளார். சபையை வழிநடத்தும் சபாநாயகர் அமரும் இடத்தில் மைக்ரோபோன்களை ஆன் செய்யவோ அல்லது ஆஃப் செய்யவோ எந்த ஒரு பிரத்யேக பட்டனும் கிடையாது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்தும் எவருக்கும் இந்த உண்மை தெரியும் என்றும், அவதூறு பரப்பும் நோக்கில் இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சபையில் மைக்ரோபோன்கள் செயல்படும் விதம் குறித்து விளக்கிய அவர், சபாநாயகரால் பேச அனுமதி வழங்கப்பட்டு, யாருடைய பெயர் அழைக்கப்படுகிறதோ, அவர்களுடைய மைக் மட்டுமே தானாகவே செயல்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.

இந்நிலையில் விதிகளை மீறிப் பேச முற்படும்போதோ அல்லது அனுமதி இல்லாத நேரங்களிலோ மைக் செயல்படாது என்பதால், இது திட்டமிட்டு செய்யப்படும் செயல் அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற மரபுகளைக் காப்பதும், விதிகளின்படி சபையை நடத்துவதும் தனது கடமை என்றும், எதிர்க்கட்சியினர் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் இந்த விளக்கத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.