மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் சிரமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். கடந்த கால சிரமங்கள் விலகி மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். விலகி சென்றவர்கள் திரும்பி வருவார்கள். செயலில் உற்சாகம் காணப்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி சீராக இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். சுப காரிய பேச்சுகளில் நல்ல முடிவு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது.

மனதில் ஒருவித மகிழ்ச்சி ஏற்படும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து பேசுவது நல்லது. சந்திராஷ்டமம் முடியும் கட்டத்தில் இருப்பதால் பயம் வேண்டாம். பெண்களுக்கு நியாயமான கோரிக்கை நிறைவேறும். செய்யும் செயலை அற்புதமாக முடிப்பீர்கள்.

புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுயமரியாதை வெளிப்படும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஆறு
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்